

என்னென்ன தேவை?
பாசிப் பருப்பு - அரை கப்
பொடித்த வெல்லம் அல்லது சர்க்கரை - அரை கப்புக்குக் கொஞ்சம் குறைவாக
ஏலக்காய்ப் பொடி - அரை டீஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
மேல் மாவு செய்ய:
உளுந்து மாவு - முக்கால் கப்
அரிசி மாவு - அரை கப்
உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
பாசிப் பருப்பைச் சுத்தம் செய்து, தேவையான அளவு தண்ணீர்விட்டு குக்கரில் வேகவைத்து மசித்துக்கொள்ளுங்கள். இதனுடன் வெல்லம், ஏலக்காய் கலந்து ஐந்து நிமிடம் ஊறவிடுங்கள். பூரணத்தைச் சிறு உருண்டைகளாகப் பிடித்துவையுங்கள்.
ஊறவைத்த உளுத்தம் பருப்பைத் தண்ணீர் வடித்து கெட்டியாக அரையுங்கள். இதில் உப்பு, அரிசி மாவு கலந்து, நெய் விட்டு நன்கு கலந்துகொள்ளுங்கள். பூரண உருண்டைகளை மாவுக் கலவையில் தோய்த்து, சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள். பூரணத்தை வட்டம், நீள் வட்டம் என எந்த வடிவிலும் செய்யலாம்.