

என்னென்ன தேவை?
தண்டுக் கீரை 2 கைப்பிடியளவு
முளைக்கட்டிய பாசிப்பயறு, சோயா பீன்ஸ் தலா அரை கப்
வெங்காயம் 1
தேங்காய்த் துருவல் அரை மூடி
மிளகுத் தூள் 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - சிறிதளவு
உப்பு தேவையான அளவு
எப்படிச் செய்வது?
கீரையை அலசி, பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். பயறு, சோயாபீன்ஸை தனித்தனியாக வேகவையுங்கள். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து தாளித்துப் பின்னர் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பின் கீரையை சேர்த்து வதக்குங்கள். அதனுடன் மிளகு, பெருங்காயம், உப்பு சேர்த்து, கீரை வேகும்வரை வதக்குங்கள். கீரை வெந்தவுடன் வேகவைத்துள்ள தானியங்களைச் சேர்த்துக் கிளறி, தேங்காய்த் துருவல் சேர்த்து இறக்கிவையுங்கள்.