

என்னென்ன தேவை?
மரவள்ளித் துருவல் - 2 கப்
துருவிய வெல்லம் - ஒரு கப்
தேங்காய்த் துருவல் - அரை கப்
நெய் - 4 டேபிள் ஸ்பூன்
ஏலப்பொடி - ஒரு சிட்டிகை
முந்திரித் துண்டுகள் - 10
எப்படிச் செய்வது?
மரவள்ளிக் கிழங்கைத் தோல்சீவி, துருவிக்கொள்ளுங்கள். அதை இட்லித்தட்டில் போட்டு, ஆவியில் வேகவையுங்கள். அடி கனமான பாத்திரத்தில் வெல்லத்துடன் நான்கு டேபிள் ஸ்பூன் தண்ணீர், தேங்காய்த் துருவல் சேர்த்து கெட்டியாகப் பாகு காய்ச்சுங்கள்.
ஏலப்பொடி தூவி இறக்கி, நெய்யில் முந்திரியை வறுத்துச் சேருங்கள். வேகவைத்த மரவள்ளித் துருவலை இதனுடன் சேர்த்துக் கிளறினால் உதிரியான புட்டு தயார்.