

என்னென்ன தேவை?
கோதுமை மாவு - ஒரு கப்
மரவள்ளித் துருவல் - ஒரு கப்
தக்காளி, வெங்காயம் - தலா 1
இஞ்சி - சிறிய துண்டு
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
கறிவேப்பில்லை - ஒரு கொத்து
எள் - ஒரு டேபிள் ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
கோதுமை மாவுடன் சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்துகொள்ளுங்கள். வாணலியில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்குங்கள். பிறகு உப்பு, பெருங்காயம், இஞ்சி, மிளகாய்த் தூள், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி எள், மரவள்ளித் துருவல் சேர்த்து வதக்குங்கள். தண்ணீர் சேர்க்கக் கூடாது. நன்றாக வதங்கியதும் இறக்கிவையுங்கள்.
பிசைந்து வைத்த மாவைச் சப்பாத்தியாகத் தேய்த்து, நடுவில் 2 டீஸ்பூன் மரவள்ளிப் பூரணத்தை வைத்து மூடி, சப்பாத்தியாகத் திரட்டுங்கள். சூடான தோசைக் கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு வேகவைத்தால் அருமையான மசாலா சப்பாத்தி தயார்.