

என்னென்ன தேவை?
கடலைப் பருப்பு, துவரம் பருப்பு - தலா அரை கப்
உளுந்து - - 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் - தலா 2
இஞ்சி - சிறிய துண்டு
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயத் தூள் - கால் டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
பருப்பு வகைகளைச் சுத்தம் செய்து, ஒரு மணி நேரம் ஊறவையுங்கள். தண்ணீரை வடித்து, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்தெடுங்கள். மாவுடன் இஞ்சி, கறிவேப்பிலை, உப்பு, பெருங்காயத்தைச் சேர்த்துப் பிசையுங்கள். வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும், மாவுக் கலவையில் சிறிது எடுத்து வடையாகத் தட்டி எண்ணெயில் போட்டு லேசாக வெந்ததும் எடுத்துவிடுங்கள். பிறகு நான்கைந்து வடைகளைத் தட்டி எண்ணெயில் போடுங்கள். முதலில் போட்ட வடைகளை மீண்டும் எண்ணெயில் போட்டு வேகவிட்டு எடுங்கள். இதேபோல அனைத்து வடைகளையும் செய்ய வேண்டும். மொறுமொறுவென இரண்டு நாட்களுக்குக் கெடாமல் இருக்கும்.