

என்னென்ன தேவை?
வரகரிசி 3 டீஸ்பூன்
காய்ச்சிய பால் அரை கப்
தேங்காய் 1 மூடி
பொடித்த வெல்லம் முக்கால் கப்
திராட்சை, முந்திரி - சிறிதளவு
ஏலக்காய்ப் பொடி - அரை டீஸ்பூன்
நெய் சிறிதளவு
எப்படிச் செய்வது?
வரகரிசியை ரவை போல் நன்றாகப் பொடித்து, நெய் விட்டு வறுத்துக்கொள்ளுங்கள். வாணலியில் தேவையான அளவு தண்ணீர் விட்டுக் கொதித்ததும் வரகரிசி ரவையைச் சேர்த்து மிதமான தீயில் வேகவிடுங்கள். வெந்ததும் வெல்லத்தைச் சேர்த்துப் பின் தேங்காயை அரைத்துச் சேருங்கள்.
நன்கு கொதித்ததும் ஏலப்பொடியைச் சேர்த்து இறக்கிவையுங்கள். கொஞ்சம் ஆறியதும் காய்ச்சிய பாலைக் கலந்து, முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்துச் சேருங்கள். விரும்பினால் பச்சைக் கற்பூரமும் சேர்த்துக்கொள்ளலாம்.