

என்னென்ன தேவை?
கடலைப் பருப்பு, பொடித்த வெல்லம் - தலா அரை கப்
தேங்காய்த் துருவல் - கால் கப்
ஏலக்காய்ப் பொடி - அரை டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
மேல் மாவு செய்ய:
ரவை - ஒரு கப்
பால் - இரண்டு கப்
உப்பு - ஒரு சிட்டிகை
எப்படிச் செய்வது?
கடலைப் பருப்பைச் சுத்தம் செய்து, தண்ணீர் விட்டு வேகவையுங்கள். தண்ணீரை வடிகட்டி, பருப்பை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றியெடுங்கள். வெல்லத்தைச் சிறிது தண்ணீரில் கரைத்து வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து அரைத்த விழுது, தேங்காய், ஏலக்காய்ப் பொடி போட்டுக் கலந்து கெட்டியான பூரணமாகக் கிளறுங்கள்.
பாலில் ரவை, உப்பு கலந்து அரை மணி நேரம் ஊறவிடுங்கள். பூரணத்தைச் சிறு சிறு உருண்டைகளாக்கி, ரவை கலவையில் தோய்த்து சூடான எண்ணெயில் போடுங்கள். நிதானமான தீயில் வேகவிட்டு எடுங்கள்.