

என்னென்ன தேவை?
பொரி - 1 கப்
ஓமப் பொடி 1 கப்
வெங்காயம், தக்காளி தலா 1
மல்லித் தழை - சிறிதளவு
சாட் மசலா - 1 டீஸ்பூன்
சாட் மசாலா செய்ய தேவையான பொருட்கள் :
சீரகம், தனியா, மாங்காய்த் தூள் - தலா கால் கப்
கருப்பு உப்பு, மிளகு தலா அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் 8
எப்படிச் செய்வது?
சாட் மசாலா செய்யக் கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் வெயிலில் காயவைத்து அரைத்தெடுத்தால் சாட் மசலா தயார். சாட் மசாலா பொடியுடன் பொரி, ஓமப் பொடி, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, மல்லித் தழை ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்தால் பொரி சாட் மசாலா தயார்.
சாட் மசாலா பொடியை சாலட், பழக்கலவை, தயிர் பச்சடி ஆகிய்வற்றிலும் தூவிச் சாப்பிடலாம்.