

என்னென்ன தேவை?
மொச்சைப் பயறு - கால் கப்
பச்சைப் பயறு - அரை கப்
சிவப்பு காராமணி - கால் கப்
தேங்காய்த் துருவல் - கால் கப்
இஞ்சி - சிறு துண்டு
கறிவேப்பிலை - சிறிதளவு
பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் - தலா 2
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
உளுந்து - ஒரு டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
மொச்சை, காராமணி இரண்டையும் முதல் நாள் இரவே ஊறப்போடுங்கள். பச்சைப் பயறைக் காலையில் ஊறப்போட்டால் போதும். பயறு வகைகளைத் தனித் தனியாக வேகவையுங்கள். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் காய்ந்த மிளகாய், கடுகு, உளுந்து, பெருங்காயத் தூள் சேர்த்து வறுத்தெடுக்கவும். இஞ்சித் துண்டுகள், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டுக் கிளறி, வேகவைத்த பயறு வகைகளைத் தண்ணீர் வடித்துச் சேர்த்துக் கிளறுங்கள். நன்கு கலந்து வந்ததும் தேங்காய்த் துருவல் தூவி இறக்கிவையுங்கள்.