

என்னென்ன தேவை?
பச்சரிசி மாவு - ஒரு டம்ளர்
வெல்லம் - 125 கிராம்
ஏலக்காய் - 4
தேங்காய்த் துருவல் - 4 டீஸ்பூன்
பால் - அரை லிட்டர்
நெய் - ஒரு டீஸ்பூன்
குங்குமப்பூ - சிறிதளவு
எப்படிச் செய்வது?
ஒரு கனமான பாத்திரத்தில் கால் டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடுங்கள். அதில் பாதி வெல்லம் போட்டு வெல்லம் கரைந்தபின், தேங்காய்த் துருவல், ஏலப்பொடி, நெய் இவற்றைச் சேர்த்துப் பின் அரிசி மாவையும் போட்டு கைவிடாமல் கிளறி இறக்குங்கள். இந்த மாவை கோலி குண்டு அளவுக்குச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளுங்கள்.
இவற்றை ஆவியில் வேகவையுங்கள். பாலைக் காய்ச்சி குங்குமப் பூ, ஏலப்பொடி போட்டு, வேகவைத்த உருண்டைகளைப் போட்டு 5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கிவையுங்கள். பால் கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் கலந்துகொள்ளலாம்.