

என்னென்ன தேவை?
தேங்காய் - 2
ஏலக்காய் - 10 கிராம்
நெய் - 200 கிராம்
வெல்லம் - 300 கிராம்
எப்படிச் செய்வது?
தேங்காயை உடைத்துத் துருவிக்கொள்ளுங்கள். அதனுடன் சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக அரைக்கவும் கையில் தேங்காய்ப்பூ தட்டுப்படாத அளவுக்கு மையாக அரைக்க வேண்டும். அரைத்த விழுதை, அடி கனமான பாத்திரத்தில் போட்டு நன்றாகக் கிளறுங்கள். மற்றொரு பாத்திரத்தில் வெல்லத்தைப் பொடித்து, தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும்.
இதை தேங்காய்விழுதுடன் வடிகட்டி கலந்து கிளறுங்கள். ஏலப்பொடி சேர்த்துக் கிளறுங்கள். இடையிடையே நெய் ஊற்றிக்கொண்டே கிளறுங்கள். முந்திரியை நெய்யில் வறுத்துச் சேருங்கள். தேங்காய்ப்பால் நன்றாகத் திரண்டு வரும்போது இறக்கி விடுங்கள்.