

என்னென்ன தேவை?
பாசுமதி அரிசி, பிஞ்சு சுண்டைக்காய் - தலா 1 கப்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
பூண்டு - 6 பல்
எண்ணெய் - 3 டீஸ்பூன்
துருவிய தேங்காய் - சிறிதளவு
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி, புதினா - சிறிதளவு
தக்காளி - 1
இஞ்சி - சிறு துண்டு
பிரிஞ்சி இலை - 1
சோம்பு - அரை டீஸ்பூன்
ஏலக்காய், கிராம்பு - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
தேங்காய், பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி, இஞ்சி, தக்காளி இவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைக்கவும். பாசுமதி அரிசியை லேசாக வறுத்து, ஒன்றரை கப் நீர், சிறிதளவு உப்பு சேர்த்து உதிரியாக வேகவைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டுச் சுண்டைக்காய்களை வதக்கி, பூண்டு, அரைத்த விழுது, ஏலம், கிராம்பு, சோம்பு சேர்த்து வதக்கவும்.
வேகவைத்த சாதத்தை அதனுடன் சேர்த்துக் கிளறி இறக்கவும். சுண்டைக்காய் பிடிக்காத குழந்தைகள்கூட, இந்த பிரியாணியை இரண்டு நிமிடங்களில் காலி செய்து விடுவார்கள்.