

என்னென்ன தேவை?
தினை அரிசி, வரகரிசி, கம்பு, ராகி, பொட்டுக்கடலை - தலா அரை கப்
சர்க்கரை - 2 கப்
நெய் - 1 கப்
முந்திரிப் பருப்பு - 10
ஏலக்காய்த் தூள் - அரை டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
தினை அரிசி, வரகரிசி, கம்பு, ராகி, பொட்டுக்கடலை அனைத்தையும் நன்றாக வாசனை வரும்வரை வறுக்கவும். பொட்டுக்கடலையைச் சூடு வரும்வரை வறுத்தால் போதும். ஆறியதும் அனைத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டு மாவாக அரைக்கவும். சர்க்கரையைப் பொடித்துக் கொள்ளவும். அரைத்த மாவு, சர்க்கரைத் தூள், ஏலக்காய்த் தூள் அனைத்தையும் நன்றாகக் கலக்கவும்.
முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்து மாவு கலவையில் சேர்க்கவும்.நெய்யைச் சூடாக்கி மாவுக் கலவையில் ஊற்றி, சூட்டுடன் உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும். சர்க்கரையை ஒன்றரை கப் அளவு எடுத்துக் கொண்டு, அதனுடன் கால் கப் குளுகோஸ் பவுடர், கால் கப் பால் பவுடர் சேர்த்தும் செய்யலாம்.