

என்னென்ன தேவை?
கொத்துக்கறி - 250 கிராம்
உருளைக் கிழங்கு - அரை கிலோ
கரம் மசாலா - அரை டீஸ்பூன்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
சோள மாவு - 2 டீஸ்பூன்
பிரெட் துாள் - சிறிதளவு
முட்டை- 1
கொத்தமல்லி - சிறிதளவு
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது - 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை சிட்டிகை
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
வேகவைத்த உருளைக் கிழங்கு, கொத்துக்கறி, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, இஞ்சி-பூண்டு விழுது, கரம் மசாலா, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு, சோள மாவு அனைத்தையும் சேர்த்து நன்றாகப் பிசைந்துகொள்ளுங்கள். பிசைந்த கலவையை அரை மணிநேரம் ஃபிரிட்ஜில் வைத்து எடுங்கள்.
முட்டையை நன்றாக அடித்துக்கொள்ளுங்கள். பிசைந்த கலவையை வெளியே எடுத்து, தேவைக்கு ஏற்ற வடிவில் தட்டி, முட்டையில் தோய்த்து, பிரெட் தூளில் புரட்டியெடுங்கள். இதன் மேல் லேசாகச் சோள மாவைத் தூவி, தவாவில் போட்டுப் பொரித்தெடுங்கள்.