

என்னென்ன தேவை?
மஞ்சள் பூசணி - அரை கிலோ
(தோல் எடுக்கக் கூடாது)
பச்சை மிளகாய் - 6
காராமணி - 200 கிராம்
வெல்லம் - 10 கிராம்
தேங்காய் எண்ணெய் - 4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
பூசணிக்காயைச் சதுரமாக நறுக்கிக்கொள்ளுங்கள். அதனுடன் ஒரு கப் தண்ணீர், பச்சை மிளகாய், உப்பு, வெல்லம் சேர்த்து வேகவையுங்கள். காராமணியைத் தனியாக வேகவைத்துக்கொள்ளுங்கள்.
இதைக் கொதிக்கும் குழம்பில் சேர்த்து, நன்றாகக் கொதிக்கவையுங்கள். எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து வந்ததும் தேங்காய் எண்ணெய் சேர்த்து இறக்கிவையுங்கள்.