

என்னென்ன தேவை?
அரிசி மாவு - ஒரு கப்
தினை, வரகு, சாமை மாவு - ஒரு கப்
உளுந்து மாவு - அரை கப்
சீரகம் - 2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
அரிசி மாவு, தினை மாவு, சாமை மாவு, வரகு மாவு, உளுந்து மாவு இவற்றுடன் உப்பு, பெருங்காயம் சேர்த்து சிறிதளவு வெண்ணெய் சேர்த்துப் பிசையுங்கள். தண்ணீரைச் சிறிது சிறிதாகச் சேர்த்துப் பிசையுங்கள்.
பிசைந்த மாவை முறுக்கு அச்சில் போட்டுப் பிழிந்து, சூடான எண்ணெயில் போடுங்கள். குறைவான தீயில் வேக விடுங்கள். பொன்னிறமாக வெந்ததும் எடுத்துவிடலாம்.