

என்னென்ன தேவை?
மரவள்ளிக் கிழங்கு - ஒரு கிலோ
பச்சைமிளகாய் - 10
சீரகம் - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - கால் டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
மரவள்ளிக் கிழங்கைத் தோல் சீவி, பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து மைபோல் அரைத்துக்கொள்ளுங்கள். இந்தக் கலவையுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விட்டுக் கிளறுங்கள்.
அப்பளம் தட்டும் பதம் வந்தவுடன், இறக்கிவையுங்கள். சூடு ஆறியதும் சின்னச் சின்ன அப்பளம் போல் தட்டி, வெயிலில் காயவையுங்கள்.
நன்றாகக் காய்ந்ததும், காற்றுப் புகாத டப்பாவில் எடுத்துவையுங்கள். சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுத்தால் சுவை அற்புதமாக இருக்கும்.