

என்னென்ன தேவை?
தினை மாவு - 1கப்
கோதுமை மாவு - கால் கப்
சீரகம் அல்லது ஓமம் - கால் டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
தினை மாவு, கோதுமை மாவு, உப்பு, சீரகம் இவற்றுடன் தேவைக்கேற்ப நீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்துகொள்ளுங்கள்.
பிசைந்த மாவிவைச் சிறு சிறு உருண்டைகளாக எடுத்து பூரிகளாகத் திரட்டுங்கள். இவற்றைச் சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள்.