

என்னென்ன தேவை?
பச்சரிசி - 2 கப்
உளுந்து - ஒரு கப்
வெந்தயம் - ஒரு டீஸ்பூன்
தயிர் - அரை கப்
சுக்குத் தூள் - அரை டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை
முந்திரி - 15
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
மிளகு - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
அரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் நான்கு மணி நேரம் ஊறவையுங்கள். பிறகு இவற்றைச் சிறிது கெட்டியாக அரைத்துக்கொள்ளுங்கள். இதில் சுக்குத் தூள், உடைத்த மிளகு - சீரகம் ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்குங்கள். பிறகு உப்பு, தயிர், நெய், பெருங்காயத் தூள் ஆகியவற்றைச் சேர்த்து எட்டு மணி நேரம் புளிக்கவிடுங்கள். இட்லி வார்க்கும்போது வறுத்த முந்திரியை மாவில் சேர்த்துக் கலக்குங்கள்.
நெய் தடவிய கிண்ணம் அல்லது டம்ளரில் பாதிளவு மாவை ஊற்றி ஆவியில் 20 முதல் 25 நிமிடம்வரை வேகவையுங்கள். அற்புதச் சுவையோடு அசத்தலாக இருக்கும் இந்த இட்லி.