

என்னென்ன தேவை?
அவல் - 100 கிராம்
முந்திரி - 50 கிராம்
பாதாம் - 20 கிராம்
உலர்ந்த திராட்சை, பேரிச்சம்பழம் - 50 கிராம்
வெல்லம் - 50 கிராம்
ஏலப்பொடி - 1 டீஸ்பூன்
நெய் - 50 கிராம்
எப்படிச் செய்வது?
அவலை வெறும் வாணலியில் லேசாகப் பிரட்டி எடுங்கள். அதை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றியெடுங்கள். அதனுடன் முந்திரி, பாதாம், பேரீச்சம்பழம், திராட்சை ஏலப்பொடி வெல்லம் சேர்த்துப் பிசைந்துகொள்ளுங்கள்.
அதனுடன் நெய் சேர்த்து, சிறிய உருண்டைகளாகப் பிடியுங்கள். கிருஷ்ண ஜெயந்திக்கு அவல் பொங்கல், அவல் கேசரி செய்வது வழக்கம். ஒரு மாறுதலுக்கு அவல் நட்ஸ் உருண்டை செய்யலாம்.