

என்னென்ன தேவை?
சுண்டைக்காய் - 1 கப்
நெல்லிக்காய் (கொட்டை நீக்கி நறுக்கியது) - அரைக் கப்
பச்சை மிளகாய் - 8
புளி - சிறிதளவு
வெந்தயம், கடுகு, பெருங்காயம் - தலா 1 டீஸ்பூன் நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
சுண்டைக்காய், நெல்லிக்காய், புளி, உப்பு, பச்சை மிளகாய் அனைத்தையும் ஒன்றாக மிக்ஸியில் போட்டுச் சற்றுக் கரகரப்பாய் அரைக்கவும். வெந்தயத்தை வாணலியில் வறுத்துப் பொடிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டுக் கடுகு தாளித்து, அரைத்த சுண்டைக்காய் கலவையைச் சேர்த்து வதக்கவும்.
மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், வெந்தயத் தூள் சேர்த்து, சுருளக் கிளறி இறக்கவும். இதைச் சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். உமிழ்நீர் சுரப்பதை அதிகரிக்கும். ஜீரணத்துக்கு உதவும்.