

என்னென்ன தேவை?
குதிரைவாலி - கால் கப்
நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு - 1 கப், பச்சை பட்டாணி - கால் கப்
வெங்காயம், தக்காளி - தலா 1
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 6 பல்
புதினா, கொத்தமல்லி - கைப்பிடி அளவு
வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம், மிளகுப் பொடி - தலா 1 டீஸ்பூன்
பிரியாணி இலை - 1
பால் - கால் கப்
உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
குக்கரில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், பிரியாணி இலை, சீரகம், நறுக்கிய வெங்காம், தக்காளி, இஞ்சி, பூண்டு (தட்டிக்கொள்ளவும்), நறுக்கிய காய்கறிகள், பட்டாணி சேர்த்து வதக்கவும். சுத்தம் செய்த குதிரைவாலியைச் சேர்க்கவும்.
ஐந்து டம்ளர் நீர் சேர்த்து குக்கரை மூடிவிடவும். 4 விசில் வந்ததும் சிம்மில் 10 நிமிடம் வைத்து இறக்கிவிடவும். பிரஷர் அடங்கியதும் மூடியைத் திறந்து, உப்பு, மிளகுத் தூள், பால் சேர்த்துக் கிளறவும். விரும்பினால் ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்துப் பரிமாறலாம். காய்கறிகளை அரைத்து, விழுதாக்கியும் சூப்பில் சேர்க்கலாம்.