

என்னென்ன தேவை?
சாமை சாதம் – 1 கப்
வேகவைத்த பட்டாணி - 3 டீஸ்பூன்
பாதாம், முந்திரி - 10 (துருவி, நெய்யில் வறுத்துக் கொள்ளவும்)
உப்பு, நல்லெண்ணெய், நெய் - தேவையான அளவு
வறுத்து அரைக்க:
மிளகு - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
தாளிக்க
சீரகம் - 1 டீஸ்பூன்
கடுகு - கால் டீஸ்பூன்
உளுந்து - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை- சிறிதளவு
எப்படிச் செய்வது?
வாணலியில் நெய், எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளியுங்கள். அரைத்து வைத்திருக்கும் பொடி, வேகவைத்த பட்டாணி, சாதம், உப்பு சேர்த்துக் கிளறிவிடுங்கள். பாதாம், முந்திரியைத் தூவினால் சீரக சாதம் தயார்.
உடல் உறுப்புகளைச் சீராக இயங்கச் செய்யும் தன்மை இந்தச் சாதத்துக்கு உண்டு. உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும், பசியை தூண்டும்.
ராஜபுஷ்பா