தலைவாழை: நூல்கோல் கீர்

தலைவாழை: நூல்கோல் கீர்
Updated on
1 min read

மாசி மாதத்திலேயே வெயில் தொடங்கிவிட்டது. வெயிலில் அதிகமாக அலைந்து திரிந்தால் உடலில் நீர்ச்சத்து குறைந்துவிடும். அதைச் சமப்படுத்த போதுமான அளவு தண்ணீரைக் குடிப்பதுடன் நீர்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். நூல்கோலில் நீர்ச்சத்துடன் சில வகை வைட்டமின்கள், பொட்டாசியம், மக்னீசியம், மாங்கனீசு போன்ற தாது உப்புகளும் உள்ளன. இந்தக் காயில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் அது ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும். நூல்கோல் பயன்படுத்தி செய்யக்கூடிய உணவு வகைகள் சிலவற்றைச் சமைக்கக் கற்றுத்தருகிறார் சென்னை போரூரைச் சேர்ந்த ராஜகுமாரி.

என்னென்ன தேவை?

நூல்கோல் - 2
தேங்காய்த் துருவல்
- 4 டேபிள் ஸ்பூன்
பாதாம் - 8
முந்திரி - 4
ஏலக்காய்ப் பொடி - 1 டீஸ்பூன்
சர்க்கரை - அரை கப்
மில்க்மெய்டு - கால் கப்

எப்படிச் செய்வது?

நூல்கோலைத் தோல் சீவிப் பொடியாக அரிந்து, வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள். அதனுடன் தேங்காய்த் துருவலைச் சேர்த்து மிக்ஸியில் மையாக அரைத்துக்கொள்ளுங்கள். அடி கனமான வாணலியில் அரை கப் சர்க்கரையைச் சேர்த்து சர்க்கரை மூழ்கும்வரை தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடுங்கள். சர்க்கரைத் தண்ணீர் நன்றாகக் கொதித்த பிறகு நூல்கோல் விழுதைச் சேர்த்து ஒரு கொதிவிடுங்கள். அதனுடன் மில்க்மெய்டு, ஏலப் பொடி சேர்த்து ஒரு கொதி வந்ததும் பாதாம், முந்திரியைப் பொடித்துச் சேர்த்து இறக்குங்கள். இதைச் சூடாகவோ குளிர்ச்சியாகவே பரிமாறலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in