Last Updated : 26 Feb, 2020 03:05 PM

Published : 26 Feb 2020 03:05 PM
Last Updated : 26 Feb 2020 03:05 PM

நாவூற வைக்கும் ‘ஹனி சிக்கன்’ செய்வது எப்படி?  

அசைவப் பிரியர்களுக்கு சிக்கன் என்றாலே அலாதிப் பிரியம். அது எந்த முறையில் சமைக்கப்பட்டிருந்தாலும் சரி. உலகில் அனைத்து நாடுகளின் உணவுப் பட்டியலிலும் சிக்கன் இன்றியமையாத உணவாகத் திகழ்கிறது. அந்த வகையில் நாவில் எச்சில் ஊறவைக்கும் ‘ஹனி சிக்கன்’ செய்யும் முறையை இப்போது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

* சிக்கன் விங்ஸ் - 300 கிராம்
* சோள மாவு - அரை கப்
* மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
* தேன் - 4 தேக்கரண்டி
* மிளகுத் தூள் - 1 தேக்கரண்டி
* இஞ்சி பூண்டு அரைத்தது - 1 தேக்கரண்டி
* பார்பிக்யூ சாஸ் - அரை கப்
* உப்பு - தேவையான அளவு
* எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

சுத்தம் செய்யப்பட்ட சிக்கனை ( விங்ஸ்) ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் அரைத்த இஞ்சி பூண்டு, உப்பு சேர்த்து நன்கு கிளரி சிறிது ஊற வைக்க வேண்டும்.

மற்றொரு பாத்திரத்தில் சோள மாவு, மிளகுத் தூள், மிளகாய்த் தூள், உப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து கலக்க வேண்டும். பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்ற வேண்டும். அதன் பிறகு ஊற வைத்த சிக்கனை எடுத்து சோளமாவு கலவையில் தோய்த்து எண்ணெயில் பொறிக்க வேண்டும்.

ஒரு புதிய பாத்திரத்தில் சிறிது அளவு எண்ணெயை ஊற்றி அதில் பார்பிக்யூ சாஸ் மற்றும் தேனை ஊற்றி நன்கு கலக்க வேண்டும். 2 நிமிடம் கலக்கிய பிறகு அடுப்பை சிம்மில் வைத்து பொரிக்கப் பட்ட சிக்கனை எடுத்து அடுப்பில் இருக்கும் பார்பிக்யூ சாஸ் மற்றும் தேன் கலவையில் கொட்டி வதக்க வேண்டும். அடுப்பை அணைத்து தட்டில் பரிமாறினால் சுவையான ‘ஹனி சிக்கன்’ ரெடி.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x