அவல் புளியோதரை
என்னென்ன தேவை?
அவல் - 1 கப்
புளி - எலுமிச்சை அளவு
வறுத்த வேர்க்கடலை – 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன்
வெந்தயம் – அரை டீஸ்பூன்
நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை - தேவையான அளவு
வறுத்து அரைக்க:
காய்ந்த மிளகாய் - 7
உளுந்து, கடலைப் பருப்பு - தலா அரை டீஸ்பூன்
வெந்தயம் – கால் டீஸ்பூன்
தனியா - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - கால் டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
அவலைத் தண்ணீரில் போட்டு அலசி, உடனே பிழிந்து வைத்துக்கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் விட்டு வெந்தயம், கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய், வேர்க்கடலை, மஞ்சள் தூள், கறிவேப்பிலை சேர்த்துத் தாளியுங்கள். புளிக் கரைசலை ஊற்றி, உப்பு சேர்த்து எண்ணெய் மேலே பிரிந்து வரும்வரை குறைந்த தீயில் கொதிக்கவிடுங்கள். அதில் அவலைச் சேர்த்து கிளறி, பின் பொடியைத் தூவி கிளறி இறக்கிவிடுங்கள்.
பித்தத்துக்கு இந்த புளி அவல் நல்லது.
ராஜபுஷ்பா
