

என்னென்ன தேவை?
கேரட், உருளைக்கிழங்கு, வெங்காயம் - தலா 2
பிரெட் துண்டுகள் - 10
பச்சை மிளகாய் - 2
இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மிளகுத் தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள் - தலா அரை டீஸ்பூன்
மல்லித் தழை - சிறிதளவு
மிளகாய்த் தூள், எலுமிச்சைச் சாறு - தலா 1 டீஸ்பூன்
உப்பு, கடலை எண்ணெய் - தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய், கேரட், இஞ்சி-பூண்டு விழுது, உப்பு, மிளகுத் தூள், சீரகத் தூள், மிளகாய்த் தூள் ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள். பச்சை வாடை போன பிறகு வேகவைத்து மசித்த உருளைக் கிழங்கு, மல்லித்தழை ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறுங்கள். எலுமிச்சைச் சாறு கலந்து இறக்குங்கள். பிரெட்டின் ஓரங்களை வெட்டியெடுங்கள். பிரெட்டைச் சப்பாத்திப் பலகையில் வைத்து தேய்த்து, அதை முக்கோண வடிவில் வெட்டியெடுங்கள். மசாலா கலவையை உள்ளே வைத்து, பிரெட்டின் ஓரங்களைத் தண்ணீர் தொட்டு ஒட்டி, எண்ணெய்யில் போட்டுப் பொரித்தெடுங்கள்.