

தலைவாழை: சத்து உருண்டை
என்னென்ன தேவை?
ராகி மாவு - 2 கப்
மண்டை வெல்லம் - 1 கப்
நெய் - 4 டீஸ்பூன்
ஏலக்காய் - 6
முந்திரி - சிறிதளவு
எள் - 1 டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
வாணலியில் நெய் விட்டு முந்திரியை வறுத்துக்கொள்ளுங்கள். அதில் மேலும் சிறிதளவு நெய் விட்டு ராகி மாவைப் போட்டு வறுத்துக்கொள்ளுங்கள். மீதி நெய்யை உருக்கிக்கொள்ளுங்கள். ராகி மாவு, வெல்லம், ஏலக்காய், முந்திரி, எள் ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் போட்டுப் பொடித்துக்கொள்ளுங்கள். மிதமான சூட்டில் நெய் விட்டு உருண்டைகளாகப் பிடியுங்கள். அனைத்து வயதினருக்கும் ஏற்ற சத்து நிறைந்த உருண்டைகள் இவை.