தலைவாழை: சுவையான சோயா 65

தலைவாழை: சுவையான சோயா 65
Updated on
1 min read

வழக்கமான சோறு, குழம்புக்கு இணையாக அவ்வப் போது புதுமையான உணவு வகைகளைச் சாப்பிடக் குழந்தை கள் மட்டுமல்ல பெரியவர்களும் விரும்புகிறார்கள். உணவகங் களுக்குச் சென்றால் செலவு கையைக் கடிக்குமோ என்ற அச்சம் ஒரு புறமும் உடலுக்கு ஒப்புக்கொள்ளுமா என்ற கவலை மறுபுறமும் வாட்டும். அதைவிடப் புதுமையான உணவு வகைகளை அவ்வப்போது வீட்டிலேயே செய்து ருசித்தால் எந்தக் கவலையும் தேவையில்லை என்கிறார் பாளையங்கோட்டை கே.டி.சி. நகரைச் சேர்ந்த பி. கோமதி. அவற்றில் சிலவற்றுக்கான குறிப்புகளையும் அவர் தருகிறார்.

சோயா 65

என்னென்ன தேவை?

சோயா உருண்டைகள் - 50 கிராம்
மிளகாய்த் தூள் - அரை டீஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது - தலா 1 டீஸ்பூன்
மைதா மாவு, சோள மாவு, அரிசி மாவு - தலா 1 டேபிள் ஸ்பூன்
சிக்கன் மசாலா - 1 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

சிறிதளவு தண்ணீரில் உப்பு சேர்த்து அதில் சோயா உருண்டைகளைப் போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க விடுங்கள். பிறகு வடிகட்டி, குளிர்ந்த நீரில் போட்டுத் தண்ணீர் இல்லாமல் பிழிந்துகொள்ளுங்கள். அதனுடன் மைதா மாவு, சோள மாவு, அரிசி மாவு, இஞ்சி-பூண்டு விழுது, சிக்கன் மசாலா, தேவையான அளவு உப்பு, எலுமிச்சைச் சாறு ஆகிய வற்றைச் சேர்த்துப் பிசைந்து 20 நிமிடம் ஊறவையுங்கள். பிறகு எண்ணெய்யில் போட்டுப் பொரித்தெடுங்கள்.

தொகுப்பு: அ.அருள்தாசன்

படங்கள்: மு. லெட்சுமி அருண்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in