

என்னென்ன தேவை?
கறுப்பு அரிசி - 100 கிராம்
பால் - 1 லிட்டர்
கண்டென்ஸ்டு மில்க் - 150 கிராம்
சர்க்கரை - 50 கிராம்
பாதாம் பருப்பு - 1 மேசைக்கரண்டி
ஏலக்காய்ப் பொடி - அரைத் தேக்கரண்டி
ரோஸ் எசென்ஸ் - 2 துளி
எப்படிச் செய்வது?
அரிசியுடன் பாலைச் சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிடுங்கள். கொதித்ததும் தீயின் அளவை மேலும் குறைத்து நன்றாகக் கிளறிவிடுங்கள். அரிசி நன்றாக வெந்ததும் அதில் சர்க்கரை, கண்டென்ஸ்டு மில்க் இரண்டையும் சேர்த்து ஓரளவு கெட்டியாகும்வரை கொதிக்கவிடுங்கள். இடையிடையே கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். அடுப்பை அணைத்துவிட்டு, கலவையில் ஏலக்காய்ப் பொடியையும் ரோஸ் எசென்ஸையும் சேர்த்துக் கலக்குங்கள். சூடு குறைந்ததும் ஃபிரிட்ஜில் வையுங்கள். நன்றாகக் குளிர்ந்ததும் சிறு சிறு கிண்ணங்களில் ஊற்றி மேலே பாதாம் பருப்புத் துருவலைத் தூவிப் பரிமாறுங்கள்.