

என்னென்ன தேவை?
கேழ்வரகு மாவு - 500 கிராம்
முந்திரி - 20 கிராம்
வெல்லம் - 150 கிராம்
எள் - 50 கிராம்
ஏலக்காய்ப் பொடி - சிறிதளவு
நெய் - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய்யை ஊற்றி, கேழ்வரகு மாவை இட்டு மிதமான தீயில் வறுத்தெடுத்துக் கொள்ளுங்கள். முந்திரியை ஒன்றிரண்டாக உடைத்து வைத்துக் கொள்ளுங்கள். எள்ளை வறுத்துக் கொள்ளுங்கள். வறுத்த கேழ்வரகு மாவுடன் ஏலக்காய்ப் பொடி, உடைத்த முந்திரி, துருவிய வெல்லம், எள் ஆகியவற்றைச் சேர்த்து கலந்துகொள்ளுங்கள். இதில் தேவையான அளவு நெய்யைச் சேர்த்து உருண்டைகளாகப் பிடியுங்கள்.