

என்னென்ன தேவை?
கறுப்பு உளுந்து - அரை கிலோ
இஞ்சி - சிறிய துண்டு
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 4
கொத்துமல்லி,
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
தோல் நீக்காத கறுப்பு உளுந்தை எட்டு மணி நேரம் ஊறவையுங்கள். ஊறியதும் அதனுடன் இஞ்சி சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள். அதிகத் தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. அரைத்த மாவில் கறிவேப்பிலை, கொத்துமல்லி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துப் பிசைந்துகொள்ளுங்கள். மாவைச் சிறிது எடுத்து, சூடான தோசைக் கல்லில் அடையாகத் தட்டுங்கள். சுற்றிலும் எண்ணெய் விட்டு இரண்டு புறங்களும் வெந்த பிறகு எடுங்கள். விரும்பிய சட்னியுடன் பரிமாறுங்கள்.