

என்னென்ன தேவை?
பச்சரிசி - 1 கப்
துவரம் பருப்பு - அரை கப்
தேங்காய் எண்ணெய் - 1 குழிக்கரண்டி
மிளகு, சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவைக்கு
பச்சை மஞ்சள் - சிறுதுண்டு
பச்சை மிளகாய் - 2
எப்படிச் செய்வது?
பச்சை மஞ்சள், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் பச்சரிசி, துவரம் பருப்பு, மிளகு, சீரகப் பொடி, உப்பு மற்றும் நான்கு கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேகவைத்து மாசித்துக்கொள்ளுங்கள். சிறு வாணலியில் தேங்காய் எண்ணெய் காயவைத்து கறிவேப்பிலை போட்டுத் தாளித்துப் பரிமாறுங்கள்.