

என்னென்ன தேவை?
பச்சரிசி - 1 கப்
உளுந்து - கால் கப்
பால் - 2 கப்
துருவிய தேங்காய், கசகசா - கால் கப்
சீரகம் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 5
உப்பு - தேவைக்கு
எப்படிச் செய்வது?
வெறும் வாணலியில் பச்சரிசி, உளுந்தைத் தனித்தனியாகச் சிவக்க வறுத்துக்கொள்ளுங்கள். பிறகு கசகசா, ஊறவைத்த தேங்காய் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள். மற்றொரு பாத்திரத்தில் பச்சரிசி, உளுந்து, பால், ஒரு கப் தண்ணீர், அரைத்த விழுது, உப்பு, நீள்வாக்கில் அரிந்த பச்சை மிளகாய் சேர்த்து குக்கரில் வைத்து வேகவையுங்கள். பின்னர் வேகவைத்த பச்சரிசி கலவை மசித்து சூடாகப் பரிமாறுங்கள்.