

என்னென்னத் தேவை?
துவரம் பருப்பு - 1 கப்
கறுப்பு உளுந்து - அரை கப்
புளிக்காத தயிர் - 1 கப்
அரிசி - 2 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
மிளகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
இஞ்சி - சிறிய துண்டு
துருவிய தேங்காய் - கால் கப்
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
எப்படிச் செய்வது?
வெறும் வாணலியில் துவரம் பருப்பு, கறுப்பு உளுந்து, அரிசி, மிளகாய் வற்றல், மிளகு, சிறிதளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்து இளஞ்சிவப்பாக வறுத்துக்கொள்ளுங்கள். இந்தக் கலவை ஆறியதும் மிக்ஸியில் போட்டுக் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள். பின்னர் ஒரு அகலமான பாத்திரத்தில் தயிர் சேர்த்து அரைத்த பொடி, துருவிய இஞ்சி, கறிவேப்பிலை, துருவிய தேங்காய் ஆகியவற்றைச் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வடை மாவு பதத்துக்குக் கலந்துகொள்ளுங்கள். சூடான எண்ணெய்யில் இந்த வடையைப் போட்டுப் பொரித்தெடுத்துப் பரிமாறுங்கள்.