

என்னென்ன தேவை?
கடலைப் பருப்பு, தனியா - தலா கால் கப்
மிளகாய் வற்றல் -7
அரிசி - அரை டீஸ்பூன்
கொப்பரைத் துருவல் - 4 டீஸ்பூன்
வெந்தயம், கடுகு - தலா கால் டீஸ்பூன்
தக்காளி - 4
புளி - சிறு எலுமிச்சைப் பழ அளவு
நீள்வாக்கில் அரிந்த கொத்தவரை, பீன்ஸ், அவரை, பறங்கிக்காய், பூசணிக்காய், சர்க்கரை, வள்ளிக்கிழங்கு, மொச்சை, பச்சை பட்டாணி - எல்லாம் சேர்த்து 4 கப்
உப்பு - தேவைக்கு
மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் - அரை டீஸ்பூன்
வெல்லம் - சிறுதுண்டு
நல்லெண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
எப்படிச் செய்வது?
வெறும் வாணலியில் தனியா, கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல், வெந்தயம், கடுகு, அரிசி, கொப்பரைத் துருவல் ஆகியவற்றைச் சிவக்க வறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதனுடன் கொப்பரைத் தேங்காய் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள். அதேபோல் தக்காளியையும் விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள். புளியை ஊறவைத்துக் கரைத்துக்கொள்ளுங்கள். பிறகு ஒரு ப்ரெஷர் பேனில் நல்லெண்ணெய் ஊற்றி 1 மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் மற்றும் காய்கறிக் கலவையைச் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளுங்கள். காய்கள் வதங்கியதும் அரைத்த தக்காளி சேர்த்து வதக்கி பிறகு இரண்டு கப் தண்ணீர் சேர்த்து உப்பு, மஞ்சள் தூள், வெல்லம் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். காய்கறி வெந்ததும் புளித்தண்ணீர், அரைத்த பொடி சேர்த்து நன்றாகக் கொதிக்கவிட்டு இறக்கினால் சுவையான பலகாய்க் கூட்டு தயார்.