

என்னென்ன தேவை?
வெள்ளைச் சோளம் - 2 கப்
திணை - 1 கப்
பாசிப்பருப்பு - கால் கப்
பேரீச்சம் பழம் - 15
கிஸ்மிஸ் திராட்சை - கால் கப்
பாதாம், முந்திரி, பிஸ்தா - தலா 10
பால்கோவா - கால் கப்
நெய் - 5 டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
சோளத்தை மூன்று மணிநேரம் ஊறவைத்துக்கொள்ளுங்கள். வெறும் வாணலியில் திணை, பாசிப்பருப்பை வாசனை வரும் வரை வறுத்துக்கொள்ளுங்கள். மிக்ஸியில் பாதாம், முந்திரி, பிஸ்தாவைக் கொர கொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள். பின்னர் பேரீச்சை, திராட்சையை விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள். இப்போது ஊறவைத்த சோளத்தை மிக்ஸியில் அரைத்துவைத்துக்கொள்ளுங்கள். அரைத்த விழுதை வடிகட்டி கொட்டியாகப் பால் எடுத்துக்கொள்ளுங்கள். பின்னர் ஒரு பாத்திரத்தில் திணை, பாசிப்பருப்பு, சோளப்பால் (2 கப் ) தண்ணீர் இரண்டு கப் சேர்த்து குக்கரில் ஐந்து விசில் வரும்வரை வேகவையுங்கள். இந்தத் திணை கலவை நன்கு ஆறியதும் எடுத்து கரண்டியால் மசித்துக்கொள்ளுங்கள். இத்துடன் அரைத்த பேரிச்சம் பழக்கலவை. பாதாம் கலவை, பால் கோவா, நான்கு டீஸ்பூன் நெய் சேர்த்து நன்கு கலந்து பரிமாறும் பாத்திரத்துக்கு மாற்றி மீதமுள்ள ஒரு டீஸ்பூன் நெய் மேலாகச் சேர்த்து பரிமாறினால் சோளப்பால் பால்கோவா சேர்த்த பொங்கல் தயார்.