

என்னென்ன தேவை?
உதிரியாக வடித்த சாதம் - 1 கப்
கெட்டியான புளிக்கரைசல் - கால் கப்
வெல்லம் - சிறுதுண்டு
மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் - கால் டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 1 குழிக்கரண்டி
உப்பு - தேவைக்கு
வறுத்து பொடிக்க
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
வேர்க்கடலை - 1 டீஸ்பூன்
தனியா - 1 டீஸ்பூன்
கறுப்பு எள் - அரை டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 4
மிளகு - 5
கறிவேப்பிலை - சிறிதளவு
எப்படிச் செய்வது?
வறுத்துப் பொடிக்கத் தந்துள்ள பொருட்களை வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்து கொர கொரப்பாக பொடித்துக்கொள்ளுங்கள். பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றிப் புளிக்கரைசல், உப்பு, பெருங்காயத் தூள், மஞ்சள் தூள், வெல்லம், பொடித்த வைத்துள்ள பொடி, வேகவைத்த சாதம் சேர்த்து நன்கு கலந்து பரிமாறுங்கள்.