

என்னென்ன தேவை?
உளுந்து – 2 டீஸ்பூன்
துருவிய வெல்லம் - அரை கப்
நெய் - 2 டீஸ்பூன்
முந்திரி - 6
திராட்சை - 10
தேங்காய்த் துருவல் - 1 டீஸ்பூன்
ஏலக்காய்த் தூள் - கால் டீஸ்பூன்
பால் - அரை லிட்டர்
எப்படிச் செய்வது?
உளுத்தை சிறிது நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்துவிடுங்கள். உலர்ந்தவுடன் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றுங்கள். வாணலியில் சிறிது நெய் விட்டு, அரைத்த உளுந்தைப் போட்டு சிவக்க வறுத்தெடுங்கள். அதில் பாலைச் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். பச்சை வாசனை போனதும் துருவிய வெல்லம், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, நெய்யில் வறுத்த தேங்காய்த் துருவல், ஏலக்காய் சேருங்கள். பாயசம் பதத்தில் வந்ததும் இறக்கிவிடுங்கள்.
இந்த உளுந்து பாயசம் கருப்பை வலுவுக்கு நல்லது.
ராஜபுஷ்பா