

என்னென்ன தேவை?
உடைத்த பச்சைப் பயறு - 200 கிராம், பச்சரிசி மாவு - அரை கப், மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன், இஞ்சி - சிறு துண்டு, பச்சை மிளகாய் - 2, சின்ன வெங்காயம் - அரை கப், மல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, கரம் மசாலா - கால் டீஸ்பூன், தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன், மிளகாய்ப் பொடி - கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
பச்சைப் பயறை நான்கு மணி நேரம் ஊறவையுங்கள். நன்றாக ஊறியதும் அதனுடன் இஞ்சி, பச்சை மிளகாய் இரண்டையும் சேர்த்து, கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள். அதனுடன் பச்சரிசி மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், மல்லித்தழை, புதினா, கறிவேப் பிலை ஆகியவற்றைச் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளுங்கள். பிசைந்த மாவை நெல்லிக்காய் அளவுக்கு உருட்டி, எண்ணெய்யில் போட்டுப் பொரித்தெடுங்கள். வடைகளின் மேலே கரம் மசாலா, நறுக்கிய வெங்காயம், மிளகாய்ப் பொடி, தக்காளி சாஸ், மல்லித்தழை ஆகியவற்றை வைத்துப் பரிமாறுங்கள். இந்த உருண்டைகளை சாம்பார், ரசம், தயிர் ஆகியவற்றில் ஊறவைத்தும் சாப்பிடலாம்.
குறிப்பு: லட்சுமி சீனிவாசன் | தொகுப்பு: ப்ரதிமா