Published : 20 Nov 2019 03:20 PM
Last Updated : 20 Nov 2019 03:20 PM
என்னென்ன தேவை?
தோலுடன் கூடிய பாசிப் பருப்பு (உடைத்தது), துவரம் பருப்பு - தலா கால் கப்,
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்,
பிரிஞ்சி இலை - 1,
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 3 டேபிள் ஸ்பூன்,
கத்தரிக்காய், பறங்கிக்காய், வாழைக்காய், கருணைக்கிழங்கு, முள்ளங்கி (எல்லாம் சேர்த்து) - ஒன்றரை கப்,
உப்பு - தேவைக்கு
தாளிக்க
நெய் - 1 டேபிள் ஸ்பூன், கடுகு, இஞ்சித் துருவல், தனியாத் தூள் - தலா 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பச்சை மிளகாய் - 1
மேலே தூவ
பொடியாக நறுக்கிய மல்லித் தழை - 2 டேபிள் ஸ்பூன், தேங்காய்த் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
எப்படிச் செய்வது?
பாசிப் பருப்பு, துவரம் பருப்பு, மஞ்சள் தூள், பிரிஞ்சி இலை ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்துக் குழைய வேக வையுங்கள். காய்கறிகளை வேகவைத்து அவற்றுடன் மிளகுத் தூள், உப்பு, தேங்காய்த் துருவல் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடுங்கள். பருப்பை அதில் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். தாளிக்கக்கொடுத்தவற்றைத் தாளித்துக் கொதிக்கும் கலவையில் சேருங்கள். அனைத்தை யும் ஒன்றாகக் கலந்து இறக்கி வையுங்கள். மேலே தூவுவதற்குக் கொடுத்தவற்றைத் தூவிப் பரிமாறுங்கள்.
குறிப்பு: ராஜகுமாரி | தொகுப்பு: ப்ரதிமா