Published : 10 Nov 2019 10:13 AM
Last Updated : 10 Nov 2019 10:14 AM
என்னென்ன தேவை?
சாமை அரிசி - 1 கப், பொடித்த வெல்லம் - 300 கிராம், நெய் - 3 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் - 3, முந்திரி - 5 - 7, தேங்காய்த் துருவல் - 3 டேபிள் ஸ்பூன், உலர்ந்த திராட்சை - 1 டேபிள் ஸ்பூன், பால் - 100 மி.லி., தண்ணீர் - 3 கப், உப்பு - 1 டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
சாமை அரிசியை நான்கு மணி நேரம் ஊற வையுங்கள். நன்றாக ஊறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ளுங்கள். ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்கவைத்து அரைத்த மாவை ஊற்றிக் கட்டியில்லாமல் கிளறுங்கள். அதில் உப்பும் பாலும் சேர்த்து அடிபிடிக்காமல் மிதமான சூட்டில் கிளறிவிடுங்கள். பொடித்த வெல்லத்தைச் சேர்த்துக் கிளறி, மாவு திரண்டு கெட்டியாக வரும்போது அடுப்பை அணைத்துவிடுங்கள். வாணலியில் நெய்யை ஊற்றிச் சூடானதும் தேங்காய்த் துருவல், நறுக்கிய முந்திரி, உலர்ந்த திராட்சை, ஏலக்காய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்துத் தாளித்து அதை மாவுடன் சேர்த்துக் கிளறிப் பரிமாறுங்கள்.