

தொகுப்பு: ப்ரதிமா
காபி சமையல்
காபி பொடியை வைத்து என்ன செய்ய முடியும்? இதென்ன கேள்வி; சுடச் சுட அருமையான காபியைப் போட்டுக் குடிக்க முடியும் என்பதுதான் பெரும்பாலானோரின் பதிலாக இருக்கும். ஆனால், காபி பொடியில் விதவிதமான உணவு வகைகளைத் தயாரித்து ருசிக்கலாம் என்கின்றனர் நம் வாசகிகள். அவர்களில் பத்துப் பேரின் கைவண்ணத்தில் உருவான காபி ரெசிபியை நாம் படிப்பதுடன் சமைத்தும் ருசிப்போம். இவர்கள் அனைவரும் இன்ஸ்டண்ட் காபித் தூளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
புட்டிங்
என்னென்ன தேவை?
பால் – ஒரு டம்ளர்
காபித் தூள் – 2 டீஸ்பூன்
கடல் பாசி - சிறிதளவு
சர்க்கரை – ஒரு கப்
மில்க் மெயிட், சாக்லெட் சிப்ஸ்
- தேவையான அளவு
எப்படிச் செய்வது?
கடல் பாசியை முதல் நாள் இரவே ஊறவைத்துக்கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் பால், ஊறவைத்த கடல் பாசி, சர்க்கரை ஆகியவற்றைச் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். பால் கொதிவந்ததும் மில்க் மெய்ட், காபித் தூள் இரண்டையும் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடுங்கள்.
பிறகு அடுப்பை அணைத்து, பாலை வேறொரு பாத்திரத்தில் ஊற்றி, சூடு ஆறியதும் விருப்பமான அச்சுகளில் ஊற்றி ஃபிரிட்ஜில் வைத்து அரை மணி நேரம் கழித்து எடுத்துப்பரிமாறுங்கள்.
- கே. மிதுஷினி