

தொகுப்பு: ப்ரதிமா
காபி சமையல்
காபி பொடியை வைத்து என்ன செய்ய முடியும்? இதென்ன கேள்வி; சுடச் சுட அருமையான காபியைப் போட்டுக் குடிக்க முடியும் என்பதுதான் பெரும்பாலானோரின் பதிலாக இருக்கும். ஆனால், காபி பொடியில் விதவிதமான உணவு வகைகளைத் தயாரித்து ருசிக்கலாம் என்கின்றனர் நம் வாசகிகள். அவர்களில் பத்துப் பேரின் கைவண்ணத்தில் உருவான காபி ரெசிபியை நாம் படிப்பதுடன் சமைத்தும் ருசிப்போம். இவர்கள் அனைவரும் இன்ஸ்டண்ட் காபித் தூளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
பட்டர் காபி
என்னென்ன தேவை?
வெந்நீர் – 1 கப்
வெண்ணெய் – 50 கிராம்
காபி பவுடர் – 2 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
மேற்குறிப்பிட்ட அனைத்துப் பொருட் களையும் மிக்ஸியில் போட்டு ஒரு நிமிடம் அடித்துக்கொள்ளுங்கள். இப்போது காபி நன்றாக நுரைத்து இருக்கும். பால் சேர்க்காத இந்த பேலியோ காபி உடலுக்கு நல்லது.
- கல்பனா.