Published : 03 Nov 2019 11:24 am

Updated : 03 Nov 2019 11:24 am

 

Published : 03 Nov 2019 11:24 AM
Last Updated : 03 Nov 2019 11:24 AM

தலைவாழை: காபி சாக்கோ பை

coffee-chocco-pie

தொகுப்பு: ப்ரதிமா

காபி சமையல்

காபி பொடியை வைத்து என்ன செய்ய முடியும்? இதென்ன கேள்வி; சுடச் சுட அருமையான காபியைப் போட்டுக் குடிக்க முடியும் என்பதுதான் பெரும்பாலானோரின் பதிலாக இருக்கும். ஆனால், காபி பொடியில் விதவிதமான உணவு வகைகளைத் தயாரித்து ருசிக்கலாம் என்கின்றனர் நம் வாசகிகள். அவர்களில் பத்துப் பேரின் கைவண்ணத்தில் உருவான காபி ரெசிபியை நாம் படிப்பதுடன் சமைத்தும் ருசிப்போம். இவர்கள் அனைவரும் இன்ஸ்டண்ட் காபித் தூளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

காபி சாக்கோ பை

என்னென்ன தேவை?

மைதா – 1 கப்
சர்க்கரை – 2 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் – 1 டீஸ்பூன்
பேக்கிங் சோடா – அரை டீஸ்பூன்
உப்பு – 1 டீஸ்பூன்
முட்டை – 2
வெண்ணெய் – 2 டீஸ்பூன்
வெனிலா எசென்ஸ் – 1 டீஸ்பூன்
காபித் தூள் – 2 டீஸ்பூன்
பால் – 1 கப்
உலர்ந்த தேங்காய்த் துருவல்,
ஜாம் – தேவையான அளவு
சாக்லேட் சிரப் - சிறிதளவு
சர்க்கரை – 1 கப்
கோகோ பவுடர் – முக்கால் கப்
வெண்ணெய் – 2 டீஸ்பூன்
வெந்நீர் – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் முட்டையை நுரை பொங்க அடித்துக்கொள்ளுங்கள். இதனுடன் பால், வெண்ணெய், வெனிலா எசென்ஸ், சர்க்கரை ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளுங்கள். சர்க்கரை கரையும்வரை நன்றாக அடித்துக்கொள்ள வேண்டும். இதனுடன் மைதா, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கட்டிகள் இல்லாமல் கரைத்துக்கொள்ள வேண்டும். பத்து நிமிடங்கள் கழித்து தவாவில் வெண்ணெய் தடவி மாவை கல் தேசை அளவுக்குத் தடிமனாக ஊற்றி எடுத்துக்கொள்ளுங்கள்.

மற்றொரு பாத்திரத்தில் சர்க்கரை, வெண்ணெய், கோகோ தூள், சூடான பால், சாக்லேட் சிரப் ஆகியவற்றைச் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். ஆறிய பான் கேக் மீது ஜாம் தடவி அதன்மேல் மற்றொரு பான் கேக்கை வையுங்கள். இதை சாக்லேட் சிரப்பில் முக்கியெடுத்து அதன் மேல் உலர்ந்த தேங்காய்த் துருவலைத் தூவிப் பரிமாறுங்கள்.

- ஜேன் கிளாரிஸ் பாலினா

தலைவாழைCoffeeChocco PieCoffee Chocco Pieகாபி சாக்கோ பைசாக்கோ பைகாபி

You May Like

More From This Category

More From this Author