தலைவாழை: காபி ஜெல்லி

தலைவாழை: காபி ஜெல்லி
Updated on
1 min read

தொகுப்பு: ப்ரதிமா

காபி சமையல்

காபி பொடியை வைத்து என்ன செய்ய முடியும்? இதென்ன கேள்வி; சுடச் சுட அருமையான காபியைப் போட்டுக் குடிக்க முடியும் என்பதுதான் பெரும்பாலானோரின் பதிலாக இருக்கும். ஆனால், காபி பொடியில் விதவிதமான உணவு வகைகளைத் தயாரித்து ருசிக்கலாம் என்கின்றனர் நம் வாசகிகள்.

அவர்களில் பத்துப் பேரின் கைவண்ணத்தில் உருவான காபி ரெசிபியை நாம் படிப்பதுடன் சமைத்தும் ருசிப்போம். இவர்கள் அனைவரும் இன்ஸ்டண்ட் காபித் தூளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

காபி ஜெல்லி

என்னென்ன தேவை?

ஜெல்லி பவுடர் – 25 கிராம்
தண்ணீர் – 5 கப்
சர்க்கரை – அரை கப்
காபித் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
கிரீம் தயாரிக்க
பால் – 400 மி.லி.
கண்டென்ஸ்டு மில்க் – 300 மி.லி.
கிரீம் – 250 கிராம்
காபித் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதனுடன் ஜெல்லி பவுடரையும் சர்க்கரையையும் சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள். அதை அடுப்பில் மிதமான தீயில் வைத்துக் காய்ச்சுங்கள். பிறகு ஜெல்லியை ஆறவைத்து தேவையான வடிவில் வெட்டிக் கொள்ளுங்கள். ஒரு டம்ளரில் தேவையான அளவு காய்ச்சிய பால், கிரீம், கண்டென்ஸ்டு மில்க், காபித்தூள் சேர்த்து கலக்குங்கள் வெட்டி வைத்துள்ள ஜெல்லி துண்டுகளைச் சேர்த்து ஃபிரிட்ஜில் வைத்துப் பரிமாறுங்கள்.

- மாலதி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in