

என்னென்ன தேவை?
கோதுமை நொய் – 200 கிராம், துவரம் பருப்பு – 2 டீஸ்பூன், தேங்காய்த் துருவல் – சிறிதளவு, ஏலக்காய்ப் பொடி – 1 டீஸ்பூன், நாட்டுச் சர்க்கரை – 150 கிராம், முந்திரி, திராட்சை – தலா 1 டீஸ்பூன், நெய் – 1 டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை
எப்படிச் செய்வது?
துவரம் பருப்பை ஊறவையுங்கள். கோதுமை நொய்யை மிக்ஸியில் போட்டு ரவை பதத்துக்குப் பொடித்துக்கொள்ளுங்கள். இதை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து, சூடு ஆறியபின் சிறிதளவு வெந்நீர் தெளித்து ஊறவைத்துள்ள துவரம் பருப்பைச் சேர்த்து இட்லித் தட்டில் வைத்து 15 நிமிடங்கள் வேகவிட்டு எடுத்து உதிர்த்துக்கொள்ளுங்கள். இதனுடன் தேங்காய்த் துருவல், ஏலக்காய்ப் பொடி, நாட்டுச் சர்க்கரை, முந்திரி, திராட்சை, நெய், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி, பரிமாறுங்கள்.