

என்னென்ன தேவை?
முழுக் கோதுமை – 100 கிராம், பச்சரிசி – 1 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் – 4, தேங்காய்த் துருவல் – 2 டீஸ்பூன், துருவிய வெல்லம் – 75 கிராம், நெய், எண்ணெய் – தலா 100 கிராம், சோடா மாவு – ஒரு சிட்டிகை
எப்படிச் செய்வது?
கோதுமையையும் பச்சரிசியையும் முதல் நாள் இரவே ஊறவையுங்கள். பின்னர் இரண்டையும் மையாக அரைத்துக் கொள்ளுங்கள். வெல்லத்தை நன்றாகக் காய்ச்சி வடிகட்டி, அரைத்த மாவில் கொட்டுங்கள். பொடித்த ஏலக்காய், துருவிய தேங்காய், சோடா மாவு ஆகியவற்றையும் மாவில் சேர்த்து நன்றாகக் கரைத்து, பத்து நிமிடங்கள் ஊறவிடுங்கள். வாணலியில் எண்ணெய்யையும் நெய்யையும் ஊற்றிச் சூடானதும் ஒரு குழிக் கரண்டியில் மாவை எடுத்து ஊற்றி இரண்டு பக்கங்களும் சிவந்ததும் எடுங்கள்.