

தொகுப்பு: ப்ரதிமாதினமும்
என்னென்ன தேவை?
சிவப்பு அவல், பொரி - தலா 100 கிராம்
பொடியாக அரிந்த தக்காளி, வெங்காயம் - தலா 2
கொத்தமல்லி - 4 டீஸ்பூன்
சீரகம் - கால் டீஸ்பூன்
சாம்பார் பொடி - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
சிவப்பு அவலைத் தண்ணீரில் ஊறவைத்துப் பிழிந்துகொள்ளுங்கள். பொரியைத் தண்ணீரில் போட்டு எடுத்து, அவலுடன் சேர்த்துக்கொள்ளுங்கள். அரிந்த தக்காளி, வெங்காயம், கொத்தமல்லித் தழை, சீரகம், சாம்பார் பொடி, உப்பு ஆகியவற்றை அவல் கலவையில் சேர்த்துக் கலந்து பரிமாறுங்கள்.