

தொகுப்பு: ப்ரதிமாதினமும்
என்னென்ன தேவை?
பொடியாக அரிந்த பேபிகார்ன் – கால் கப்
பொட்டுக்கடலை – 3 டீஸ்பூன்
ஊறவைத்த நிலக்கடலை – 25 கிராம்
சீரகத் தூள் – கால் டீஸ்பூன்
ஆம்சூர் பொடி – தேவையான அளவு
தனியா பவுடர் – கால் டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 1
பூண்டுப் பற்கள் – 3
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
பொடியாக நறுக்கிய பேபி கார்னுடன் பொட்டுக்கடலை, ஊறவைத்த நிலக்கடலை, சீரகத் தூள், ஆம்சூர் பொடி, தனியாத் தூள் ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள். காய்ந்த மிளகாய், பூண்டு, உப்பு ஆகியவற்றை மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் பொடித்துக்கொள்ளுங்கள். இந்தக் கலவையை பேபிகார்ன் கலவையுடன் கலந்து மாலை நேரச் சிற்றுண்டியாகச் சாப்பிடலாம்.